
யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனனால் தாக்கப்பட்டதாகக்
கூறி இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை (10.02) ஹோட்டலொன்றில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக இந்த சம்பவம்
நிகழ்ந்ததாக காயமடைந்த தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இரு தரப்பினரிடமிருந்தும் பெறப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் சட்ட நடவடிக்கை
எடுக்க பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.