
“அழகிய கடற்கரை – கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்” என்ற Clean Sri Lanka திட்டத்தின் கீழ்
கடற்கரைகளை சுத்தம் செய்யும் நிகழ்வு காலி, உனவடுன, பீல்லகொட ஆகிய இடங்களில் நடைபெற்றது.
இந்த நிகழ்வு கடந்த 09 ஆம் திகதி கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர்
ரத்ன கமகே தலைமையில், உள்ளூர் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் பங்கேற்புடன் நடைபெற்றது.
நாட்டில் ஆரோக்கியமான கடல் உணவுகள் கிடைப்பதை மேம்படுத்துவதற்கான தேசிய விநியோக திட்டம்
தொடர்பாக ரத்ன கமகே வலியுறுத்தினார்.
அண்மைய அமைச்சு ஆலோசனைக் குழு கூட்டத்தில், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர்
மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க
ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
இதில் நாட்டிலுள்ள அனைத்து SATHOSA நிலையங்களிலும் CeyFish விற்பனை கூடங்களை நிறுவ
தீர்மானிக்கப்பட்டதாகவும் தெரிவத்தார்.
மேலும், SATHOSA நிலையங்கள் மட்டுமின்றி, கூட்டுறவு துறையின் CO-OP CITY விற்பனை
நிலையங்களிலும் CeyFish விற்பனை கூடங்களை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தரமான கடல்உணவுகள் நாட்டின் மக்கள் அனைவருக்கும் எளிதில் கிடைக்கச் செய்ய
திட்டமிடப்பட்டுள்ளது.
“இத்திட்டத்திற்கிணங்க, இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் கிட்டத்தட்ட 1,000 CeyFish
கூடங்களை நிறுவ எதிர்பார்க்கிறோம், இதன் மூலம் பொதுமக்களுக்கு புதிய கடல் உணவுகள்
எளிதாகக் கிடைக்கும்.
இந்த முயற்சி இலங்கையின் மீன்பிடித் துறையை வலுப்படுத்துவதில் ஒரு பாரிய முன்னேற்றத்தையும்
வாடிக்கையாளர்களுக்கு வசதியை ஏற்படுத்துமென்றும் பிரதி அமைச்சர் ரத்ன கமகே மேலும் தெரிவித்தார்.