அஸ்வெசும பயனாளர்களுக்கான மகிழ்ச்சி செய்தி

அஸ்வெசும பயனாளர்களுக்கான மகிழ்ச்சி செய்தி

இந்த மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று வியாழக்கிழமை (13.02) பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, 17,25,795 குடும்பங்களுக்கான கொடுப்பனவு அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது.

இதற்காக 12.5 பில்லியன் ரூபாவுக்கும் அதிக பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அஸ்வெசும பயனாளர்கள் இன்று முதல் வங்கிக் கணக்கிலிருந்து தங்களுக்கான தொகையை பெற்றுக்கொள்ள முடியுமென நலன்புரி நன்மைகள் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version