இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடயில் இன்று(14.02) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி 174 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரை கைபபற்றியுள்ளது. விளையாடிய இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்றது. அவுஸ்திரேலியா அணிக்கெதிராக ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் இலங்கை அணி பெற்றுக்கொண்ட பெரிய வெற்றி இதுவாகும்.
இந்த தொடர் தோல்வியின் மூலமாக அவுஸ்திரேலியா அணி இரண்டாமிடத்திலிருந்து மூன்றாமிடத்துக்கு பின்னே சென்றுள்ளது.
282 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து ஓட்டங்களை பெற்றது.
ஆரம்பம் முதலே அவுஸ்திரேலியா துடுப்பாட்டத்தில் தடுமாறி வந்தது. குறிப்பாக அசித்த பெர்னாண்டோவின் பந்துவீச்சில் முதல் 3 விக்கெட்களும் வீழ்த்தப்பட்டன. அதனை தொடர்ந்து சுழற்பந்து வீச்சாளர்கள் தங்கள் கைவரிசையினை காட்ட ஆரம்பித்தனர். ஸ்டீபன் ஸ்மித் 29 ஓட்டங்களையும், ஜோஷ் இங்கிலிஷ் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.
டுனித் வெல்லாளகே 4 விக்கெட்களையும், அசித்த பெர்னாண்டோ, வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 04 விக்கெட்களை இழந்து 281 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
ஆரம்ப விக்கெட் வேகமாக வீழ்த்தப்பட்ட நிலையில் நிஷான் பீரிஸ், குஷல் மென்டிஸ் இணைப்பாட்டம் ஒன்றை ஏற்படுத்தி இலங்கை அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர். நிஷான் பீரிஸ் அறிமுக போட்டியில் அரைச்சதத்தை பூர்த்தி செய்து 51 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இணைப்பாட்டம் 98 ஓட்டங்கள். குஷல் மென்டிஸ் தொடர்ந்தும் அபாரமாக துடுப்பாடி ஐந்தாவது சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 101 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
கமிந்து மென்டிஸ் வேகமாக ஆட்டமிழக்க குஷல் மென்டிஸ், அஸலங்க ஜோடி மதியவரிசையில் நல்ல முறையில் துடுப்பாடி இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையினை மேலும் உயர்த்தினார். இருவரும் 94 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். இறுதி நேரத்தில் சரித் அஸலங்க, ஜனித் லியனகே ஆகியோர் இணைந்து 64 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். அதிரடியாக அடித்தாடிய அணியின் தலைவர் சரித் அஸலங்க ஆட்டமிழக்காமல் 78(66) ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். ஜனித் லியனகே 32 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டார்.
அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் பென் ட்வரஷியஸ், ஆரொன் ஹார்டி, சீன் அப்போட், அடம் ஷம்பா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
அணி விபரம்
இலங்கை அணி சார்பாக அவிஷ்க பெர்னாண்டோ நீக்கப்பட்டு நிஷான் பீரிஸ் அணியில் சேர்க்கப்பட்டார். நிஷான் மதுஷ்கவுக்கு இது முதலாவது போட்டி.
அவுஸ்திரேலியா அணி சார்பாக ஐந்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டிரவிஸ் ஹெட், அலெக்ஸ் ஹேரி, ஜோஷ் இக்லீஸ், கிளன் மக்ஸ்வெல், பென் ட்வரஷியஸ், ஆகியோர் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.
இலங்கை அணி :- பத்தும் நிஸ்ஸங்க, நிஷான் பீரிஸ், குசல் மென்டிஸ், கமிண்டு மென்டிஸ், சரித் அசலங்க (தலைவர்), ஜனித் லியனகே, டுனித் வெல்லாலகே, வனிது ஹசரங்க, மஹீஸ் தீக்ஷண, எஷான் மலிங்க, அசித்த பெர்னாண்டோ
அவுஸ்திரேலியா அணி :- மட் ஷோர்ட், டிரவிஸ் ஹெட், ஜேக் பிரேசர் மக்கர்க், ஸ்டீவ் ஸ்மித் (தலைவர்) , அலெக்ஸ் ஹேரி, அலெக்ஸ் கேரி, ஜோஷ் இக்லீஸ், ஆரொன் ஹார்டி, சாம் அப்பொட், அடம் சம்பா, பென் ட்வரஷியஸ், டன்வீர் ஷங்ஹா
