அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் அமைச்சின் விசேட அறிவிப்பு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் அமைச்சின் விசேட அறிவிப்பு

அஸ்வெசும பெறும் குடும்பங்களில் 70 வயதுக்கு மேற்பட்ட குறைந்த வருமானம் கொண்ட முதியவர்களுக்கு வழங்கப்படும் 3,000 ரூபாய் மாதாந்த உதவித்தொகை அஸ்வெசும கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும் என கிராம அபிவிருத்தி , சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, தேவைப்படும் குடும்பங்களில் உள்ள முதியவர்களைத் தவிர்த்து, இதுவரை உதவித்தொகையைப் பெற்று வரும் முதியோருக்கு மாத்திரமே அஞ்சல் மற்றும் துணை அஞ்சல் நிலையங்கள் மூலம் பணம் செலுத்த ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கடந்த காலங்களில் நடைமுறையில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாகக் குறிப்பிட்ட திகதியில் உதவித்தொகையை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

இதன் காரணமாக , இந்த மாதத்திற்கான உதவித்தொகை மற்றும் நிலுவையில் உள்ள கொடுப்பனவுகளை இம்மாதம் 20 ஆம் திகதி முதல் அஞ்சல் மற்றும் துணை அஞ்சல் நிலையங்கள் மூலம் செலுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version