பொலிஸ் அதிகாரிகளின் செயற்பாடுகளை கண்காணிக்க புதிய திட்டம்

பொலிஸ் அதிகாரிகளின் செயற்பாடுகளை கண்காணிக்க புதிய திட்டம்

பொலிஸ் அதிகாரிகளின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கான புதிய திட்டமொன்றை, பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சு ஆரம்பித்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல், துப்பாக்கிச் சூடு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பது பொலிஸ் அதிகாரிகள் பொறுப்பு என அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இந்தக் கடமைகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வதற்காக, பொலிஸ் அதிகாரிகளின் செயற்றிறனை மாதந்தோறும் பதில் பொலிஸ் மா அதிபர்
மதிப்பாய்வு செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூகத்துடன் நேர்மறையான உறவுகளை உருவாக்குவதும் அமைதியைப் பேணுவதும் பொலிஸ் அதிகாரிகளின் பொறுப்பு என சுட்டிக்காட்டிய அமைச்சர்
இந்தக் கடமைகளில் இருந்து தவறல் அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுடன் தொடர்புகளைக் கொண்டால், எந்தவொரு பொலிஸ் அதிகாரிக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version