வர்த்தக நிலையமொன்றில் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள்

வர்த்தக நிலையமொன்றில் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள்

நுகேகொட தெல்கட பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிலிருந்து சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான வாகன உதிரி பாகங்களை இறக்குமதி செய்யும் வர்த்தக நிலையத்தின் அடித்தளத்தில் உள்ள கார் உதிரி பாகங்களுக்கு மத்தியில் இந்த மதுபானம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் குறித்த வர்த்தக நிலையத்தில் முகாமையாளராக பணியாற்றிய மஹரகம பிரதேசத்தை சேர்ந்த 59 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வெளிநாட்டு மதுபானம் கொள்ளுப்பிட்டி மற்றும் கொட்டாவ பிரதேசங்களில் உள்ள இரவு விடுதிகளுக்கு கொண்டு செல்வதற்காக தயாரிக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Social Share

Leave a Reply