இயக்குநர் சிவா வீட்டை தேடிச் சென்றார் ரஜினி

அண்ணாத்த திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை குவித்த நிலையில், இயக்குநர் சிறுத்தை சிவாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தங்க செயின் ஒன்றை பரிசளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, குஷ்பு பிரகாஷ் ராஜ், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த ஆண்டு தீபாவளி ட்ரீட்டாக அண்ணாத்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

அண்ணாத்த திரைப்படத்திற்கு திரைக்கதையே இல்லை என்றும் ஏகப்பட்ட அண்ணன் – தங்கை பாசக்கதைகள் வெளியாகிவிட்டன போன்ற ஏராளமான விமர்சனங்கள் வெளிவந்தன. நடிகர் விஜய் நடித்த சிவகாசி திரைப்படத்துடன் ஒப்பிட்டும் கூட பல நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளினர். அதுமட்டுமல்லாது கதையே இல்லாத திரைப்படத்திற்கு பிரம்மாண்ட செட்டுகளும், தேவையே இல்லாமல் ஏகப்பட்ட நடிகர்களையும் வைத்து பொருட்செலவு செய்து எடுக்கப்பட்ட திரைப்படம் எனவாறான எதிர்மறை விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

எனினும் அதில் சுவாரஸ்யம் என்னவென்றால், திரைக்கதை ஓட்டித்தள்ளிய மொக்க கொன்சப்ட் என்றாலும், வசூல் ரீதியாக அண்ணாத்த திரைப்படம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து மீண்டும் சிறுத்தை சிவா – ரஜினி ஆகியோர் கூட்டு சேர்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கும் சிலர் எதிர்மறையான கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்த வண்ணமே உள்ளனர். யார் என்னசொன்னாலும் பரவாயில்லை வசூல் வெற்றியை தொடர்ந்து அடுத்த கூட்டணி இணையும் என்ற போர்வையில் இயக்குநர் சிறுத்தை சிவாவுக்கு தங்க செயின் அன்பளிப்பாக வழங்கியுள்ளார் ரஜினி.


தங்க செயின் வழங்கி அடுத்த கூட்டணி இணைந்தாலும் பரவாயில்லை, நல்ல கதையை அடுத்த முறையாவது வழங்குவார்களா என பொறுத்திருந்து பார்க்க வேண்டியது தான்.

இயக்குநர் சிவா வீட்டை தேடிச் சென்றார் ரஜினி
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version