இன்றுடன் நிறைவடையும் பல்கலைக்கழக மாணவர்களை பதிவு செய்யும் கால எல்லை எதிர்வரும் 16ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
மாணவர்களை பதிவு செய்ய இன்றைய தினமே (10/12) இறுதி நாள் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இது மேலும் 6 வரை நாட்களாக நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 26ஆம் திகதி 2020ஆம் ஆண்டு பொதுதராதர உயர்தர பரீட்சையில் தோற்றியிருந்த உயர்தர மாணவர்களின் பல்கலைக்கழக பதிவுகள் ஆரம்பமாகியிருந்தன.
2020 உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த மே 4ஆம் திகதியன்று வெளியிடப்பட்டது. அந்த முடிவுகளின் அடிப்படையில் 2020/2021 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்குத் தேவையான குறைந்தபட்ச வெட்டுப்புள்ளிகள் கடந்த ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதியன்று வெளியிடப்பட்டன.
மொத்தம் 301,771 பேர் கடந்த ஆண்டு பரீட்சைக்குத் தோற்றியிருந்த நிலையில், அதில் 194, 297 பேர் பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதிப்பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.