
கிரிஷ் பரிவர்த்தனையில் 70 மில்லியன் ரூபாய் குற்றவியல் முறைகேடு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு இன்று (18.02) கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றப்பத்திரிகையை கையளித்துள்ளது.
சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் கையளிக்கப்பட்டது.
பின்னர் மேல் நீதிமன்ற நீதிபதி பிரதிவாதி நாமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்