ICC சம்பியன்ஸ் கிண்ணம் இன்று ஆரம்பம்

ICC சம்பியன்ஸ் கிண்ணம் இன்று ஆரம்பம்

ICC சம்பியன்ஸ் கிண்ணம் இன்று(19.02) பகல் 2.30 இற்கு பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் முதல் போட்டியாக பாகிஸ்தானிலுள்ள கராச்சியில் ஆரம்பமாகவுள்ளது. இந்த வருட சம்பியன்ஸ் கிண்ணமானது 8 வருடங்களிற்கு பின்னர் இவ்வருடம் நடைபெறவுள்ளது.

2017 சம்பியன்ஸ் கிண்ணத்தை பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது. அது அவர்களின் முதலாவது கிண்ணமாகும். சம்பியன்ஸ் கிண்ணத்தில் அதிக தடவைகள் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் 2 தடவைகள் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளனர்.

இந்த வருட சம்பியன்ஸ் கிண்ணாத்தில் பாகிஸ்தான் அணியை மொஹமட் ரிஸ்வானும் நியூசிலாந்து அணியை மிச்சல் சன்ட்னரும் தலைமை தாங்குகின்றனர்.

அணி விபரம்

பாகிஸ்தான் அணி :- மொஹமட் ரிஸ்வான்(தலைவர்), அப்ரர் அஹமட், சல்மான் அகா, பாபர் அசாம், பஹீம் அஷ்ராப், பகர் சமான், ஹரிஸ் ரவுப், கம்ரன் குலாம், குஷ்தில் ஷா, மொஹமட் ஹஸ்னைன், நசீம் ஷா, சவுத் ஷகீல், ஷஹீன் ஷா அப்ரிடி, தய்யப் தஹிர், உஸ்மான் கான்

நியூசிலாந்து அணி :- மிச்சல் சன்ட்னர்(தலைவர்), மிச்சல் பிரேஸ்வல், மார்க் சப்மன், டெவோன் கொன்வே, ஜேகப் டபி, மட் ஹென்றி, டொம் லதாம், டேரில் மிச்சல், வில்லியம் O ரூக், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, நேதன் ஸ்மித், கேன் வில்லியம்சன், வில் யங்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version