
அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இன்று(22.02) சம்பியன்ஸ் கிண்ணத்தின் 4 ஆவது போட்டியாக லஹோரில் நடைபெற்று வருகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 351 ஓட்டங்களை பெற்றது. சம்பியன்ஸ் கிண்ணத்தில் இது இங்கிலாந்து அணியின் அதிகூடிய ஒட்டமாகும். இதில் பென் டக்கெட் 165(143) ஓட்டங்களையும், ஜோ ரூட் 68(78) ஓட்டங்களையும் பெற்றனர். இது பென் டக்கெடின் 3 ஆவது சதமும் அவரின் முதல் 150 ஓட்டங்களுமாகும். இங்கிலாந்து அணியின் முதல் இரு விக்கெட்களும் வேகமாக வீழ்த்தப்பட்டன. 3 ஆவது விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோடி சேர்ந்த பென் டக்கெட், ஜோ ரூட் ஆகியோர் 158 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து அணியின் ஓட்ட எண்ணிக்கயை உயர்த்தினர்.
அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் பென் டுவர்ஸியஸ் 3 விக்கெட்களையும், ஆடம் சம்பா, மார்னஸ் லபுஸ்சென் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
துடுப்பாட்ட வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | பந் | 4 | 6 |
பில் சால்ட் | பிடி – அலெக்ஸ் கேரி | பென் த்வார்ஷியஸ் | 10 | 06 | 1 | 1 |
பென் டக்கெட் | L.B.W | மார்னஸ் லபுஸ்ஷேன் | 165 | 143 | 17 | 3 |
ஜேமி ஸ்மித் | பிடி – அலெக்ஸ் கேரி | பென் த்வார்ஷியஸ் | 15 | 13 | 3 | 0 |
ஜோ ரூட் | L.B.W | ஆடம் சம்பா | 68 | 78 | 4 | 0 |
ஹரி ப்ரூக் | பிடி – அலெக்ஸ் கேரி | ஆடம் சம்பா | 03 | 06 | 0 | 0 |
ஜோஸ் பட்லர் | பிடி – நேதன் எல்லிஸ் | கிளென் மக்ஸ்வெல் | 23 | 21 | 1 | 1 |
லியாம் லிவிங்ஸ்டன் | பிடி – நேதன் எல்லிஸ் | பென் த்வார்ஷியஸ் | 14 | 17 | 0 | 1 |
பிரைய்டன் கார்ஸ் | பிடி – மார்னஸ் லபுஸ்ஷேன் | மார்னஸ் லபுஸ்ஷேன் | 08 | 07 | 0 | 0 |
ஜோப்ரா ஆர்ச்சர் | Not Out | Not Out | 21 | 10 | 2 | 1 |
அடீல் ரஷீத் | Not Out | Not Out | 01 | 01 | 0 | 0 |
மார்க் வூட் | ||||||
Extras | 23 | |||||
ஓவர் 50 | விக்கெட் 8 | மொத்த ஓட்டம் | 351 |
பந்துவீச்சாளர் | ஓவர் | ஓ.ஓவர் | ஓட்டம் | விக்கெட் | Economy |
ஸ்பென்ஸர் ஜோன்சன் | 07 | 00 | 54 | 00 | 7.71 |
பென் த்வார்ஷியஸ் | 10 | 00 | 66 | 03 | 6.60 |
நேதன் எல்லிஸ் | 10 | 00 | 51 | 00 | 5.10 |
கிளென் மக்ஸ்வெல் | 07 | 00 | 58 | 01 | 8.28 |
ஆடம் சம்பா | 10 | 00 | 64 | 02 | 6.40 |
மத்தியூ ஷோர்ட் | 01 | 00 | 07 | 00 | 7.00 |
மார்னஸ் லபுஸ்ஷேன் | 05 | 00 | 41 | 02 | 8.20 |
அணி விபரம்
இங்கிலாந்து அணி :- பில் சால்ட், பென் டக்கெட், ஜேமி ஸ்மித், ஜோ ரூட், ஹரி ப்ரூக், ஜோஸ் பட்லர்(தலைவர்), லியாம் லிவிங்ஸ்டன், பிரைய்டன் கார்ஸ்,ஜோப்ரா ஆர்ச்சர், அடீல் ரஷீத், மார்க் வூட்
அவுஸ்திரேலியா அணி :- ட்ரவிஸ் ஹெட், மத்தியூ ஷோர்ட், ஸ்டீவன் ஸ்மித்(தலைவர்), ஜோஷ் இங்கிலிஷ், மார்னஸ் லபுஸ்ஷேன், அலெக்ஸ் கேரி, கிளென் மக்ஸ்வெல், பென் த்வார்ஷியஸ்,நேதன் எல்லிஸ், ஆடம் சம்பா, ஸ்பென்ஸர் ஜோன்சன்