இங்கிலாந்து அதிரடி துடுப்பாட்டம்

இங்கிலாந்து அதிரடி துடுப்பாட்டம்

அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இன்று(22.02) சம்பியன்ஸ் கிண்ணத்தின் 4 ஆவது போட்டியாக லஹோரில் நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 351 ஓட்டங்களை பெற்றது. சம்பியன்ஸ் கிண்ணத்தில் இது இங்கிலாந்து அணியின் அதிகூடிய ஒட்டமாகும். இதில் பென் டக்கெட் 165(143) ஓட்டங்களையும், ஜோ ரூட் 68(78) ஓட்டங்களையும் பெற்றனர். இது பென் டக்கெடின் 3 ஆவது சதமும் அவரின் முதல் 150 ஓட்டங்களுமாகும். இங்கிலாந்து அணியின் முதல் இரு விக்கெட்களும் வேகமாக வீழ்த்தப்பட்டன. 3 ஆவது விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோடி சேர்ந்த பென் டக்கெட், ஜோ ரூட் ஆகியோர் 158 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து அணியின் ஓட்ட எண்ணிக்கயை உயர்த்தினர்.

அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் பென் டுவர்ஸியஸ் 3 விக்கெட்களையும், ஆடம் சம்பா, மார்னஸ் லபுஸ்சென் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

துடுப்பாட்ட வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்பந்46
பில் சால்ட்பிடி – அலெக்ஸ் கேரிபென் த்வார்ஷியஸ்100611
பென் டக்கெட்L.B.Wமார்னஸ் லபுஸ்ஷேன்165143173
ஜேமி ஸ்மித்பிடி – அலெக்ஸ் கேரிபென் த்வார்ஷியஸ்151330
ஜோ ரூட்L.B.Wஆடம் சம்பா687840
ஹரி ப்ரூக்பிடி – அலெக்ஸ் கேரிஆடம் சம்பா030600
ஜோஸ் பட்லர்பிடி – நேதன் எல்லிஸ்கிளென் மக்ஸ்வெல்232111
லியாம் லிவிங்ஸ்டன்பிடி – நேதன் எல்லிஸ்பென் த்வார்ஷியஸ்141701
பிரைய்டன் கார்ஸ்பிடி – மார்னஸ் லபுஸ்ஷேன்மார்னஸ் லபுஸ்ஷேன்080700
ஜோப்ரா ஆர்ச்சர்Not OutNot Out211021
அடீல் ரஷீத்Not OutNot Out010100
மார்க் வூட்      
       
Extras  23   
ஓவர்  50விக்கெட்  8மொத்த ஓட்டம்  351   
பந்துவீச்சாளர் ஓவர்ஓ.ஓவர்ஓட்டம்  விக்கெட்Economy
ஸ்பென்ஸர் ஜோன்சன்070054007.71
பென் த்வார்ஷியஸ்100066036.60
நேதன் எல்லிஸ்100051005.10
கிளென் மக்ஸ்வெல்070058018.28
ஆடம் சம்பா100064026.40
மத்தியூ ஷோர்ட்010007007.00
மார்னஸ் லபுஸ்ஷேன்050041028.20

அணி விபரம்

இங்கிலாந்து அணி :- பில் சால்ட், பென் டக்கெட், ஜேமி ஸ்மித், ஜோ ரூட், ஹரி ப்ரூக், ஜோஸ் பட்லர்(தலைவர்), லியாம் லிவிங்ஸ்டன், பிரைய்டன் கார்ஸ்,ஜோப்ரா ஆர்ச்சர், அடீல் ரஷீத், மார்க் வூட்

அவுஸ்திரேலியா அணி :- ட்ரவிஸ் ஹெட், மத்தியூ ஷோர்ட், ஸ்டீவன் ஸ்மித்(தலைவர்), ஜோஷ் இங்கிலிஷ், மார்னஸ் லபுஸ்ஷேன், அலெக்ஸ் கேரி, கிளென் மக்ஸ்வெல், பென் த்வார்ஷியஸ்,நேதன் எல்லிஸ், ஆடம் சம்பா, ஸ்பென்ஸர் ஜோன்சன்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version