புளு ஓஷன் குழுமம் ரியல் எஸ்டேட், கட்டுமானம் மற்றும் பொறியியலில் தன்னை நிலைநிறுத்திய தலைமை நிறுவனமாக உள்ளது,
சமரசமற்ற தரம், ஒருமைப்பாடு மற்றும் ஆடம்பர வாழ்க்கைக்கான அர்ப்பணிப்பு மூலம் உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் அதன் வெற்றியை விரிவுபடுத்துகிறது.
ஒரு விரிவான தீர்வு வழங்குநராக, இது பெயரில் மட்டுமல்ல, நடைமுறையிலும் “புளு ஓஷன் உத்தியை” ஏற்றுக்கொள்கிறது, மூலோபாய ரீதியாக முதன்மையான இடங்களை குறிவைத்து, அதிநவீன கண்டுபிடிப்புகளை வலியுறுத்துகிறது.
போட்டி விலையில் வேறுபட்ட தயாரிப்புகளை வழங்குவதன் மூலமும், சந்தை இயக்கவியலைப் புரிந்துகொள்வதன் மூலமும், நெறிமுறைகள், வெளிப்படைத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் மையக் கொள்கைகளை கடைபிடிப்பதன் மூலமும் மதிப்புடன் கூடிய புதுமைகளை வலியுறுத்துகிறது.
ரியல் எஸ்டேட் துறையில் முன்னோடியான தொலைநோக்கு பார்வை கொண்ட திரு. துமிலன் சிவராஜாவால் நிறுவப்பட்ட புளு ஓஷன் குழுமமானது, எப்போதும் வாடிக்கையாளர் நம்பிக்கை மற்றும் திருப்திக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. அவர் அடிக்கடி வலியுறுத்துவது போல், “ஒரு திட்டத்தை முடிப்பது நிறுவனத்திற்கு ஒரு சாதனை மட்டுமல்ல, எங்கள் வாடிக்கையாளர்கள் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் கண்ணியத்திற்கு ஒரு சான்றாகும்.”
BOI-யால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனம், கட்டுமானத்தில் உலகளாவிய தரத்தைப் பராமரிப்பதற்கான அங்கீகாரத்துடன், நாட்டின் வணிகச் சூழலை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
ஐந்து நகரங்களில் 12 பெரிய அளவிலான திட்டங்கள் மற்றும் வளர்ச்சியில் உள்ள 4,000 குடியிருப்புகளுடன், புளு ஓஷன் ஆடம்பர வாழ்க்கையை மறுவரையறை செய்து வருகிறது, செயல்பாட்டை நேர்த்தியுடன் கலக்கிறது.
Link Engineering: குழுவின் வெற்றிக்கான ஆதாரம்
புளு ஓஷன் குழுமத்தின் பெருமைமிக்க உறுப்பினராக, Link Engineering இலங்கையின் மிகவும் பிரபலமான கட்டுமானத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட கட்டுமான நிறுவனங்களில் ஒன்றாகும்.
நான்கு தசாப்தங்களுக்கும் மேலான சிறப்பைக் கொண்ட இந்த நிறுவனம், இலங்கை ஒப்பந்ததாரர்கள் சங்கம் (Major Contractors of Sri Lanka) , பசுமை கட்டட கவுன்சில் (The Green Building Council) மற்றும் கட்டுமானம் மற்றும் தொழில்துறை மேம்பாட்டு ஆணையம் (Construction and Industrial Development Authority) உள்ளிட்ட முக்கிய தொழில் அமைப்புகளின்; நற்பெயரைப் பெற்றுள்ளது, இது நாட்டின் உட்கட்டமைப்பில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
லிங்க் என்ஜினியரிங் நிறுவனம் அதன் மிகவும் மதிப்புமிக்க திட்டங்களில் சிலவற்றை நிறைவு செய்ததை அறிவிப்பதில் மேலும் மகிழ்ச்சியடைகிறது – பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் உயிரியல் அமைப்பு தொழில்நுட்ப பீடம் – யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், வாடிக்கையாளர் பராமரிப்பு மையம் – நீர் வழங்கல் அமைச்சின் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை, பல்லேகலை நடனப் பள்ளி – கண்டி, பஹிரவகந்த பாதை (கண்டி), கண்டி வீதி (யாழ்ப்பாணம், பழைய பூங்காவிற்கு நேர் எதிரே மற்றும் அலிசாண்ட்ரிஸ் மாவத்தை (மலாபே)
டில்கோ புளு ஓஷன் ஹோல்டிங் பிரைவேட் லிமிடெட்: டில்கோ சிட்டி ஹோட்டலுடன் சக்திவாய்ந்த இணைப்பு
புளு ஓஷன் குழுமம் மற்றும் டில்கோ சிட்டி ஹோட்டல் இடையேயான மூலோபாய இணைப்பு, ஆடம்பர ரியல் எஸ்டேட் மற்றும் முதலீட்டு தீர்வுகளில் நிபுணத்துவத்தை ஒருங்கிணைக்கும் நிறுவனமாக டில்கோ புளு ஓஷன் ஹோல்டிங் பிரைவேட் லிமிடெட் உருவாவதற்கு வழிவகுத்தது.
இந்த ஒத்துழைப்பு “‘YARL ROYAL PALACE” என்ற மதிப்புமிக்க திட்டத்தை உருவாக்குகிறது, இது யாழ்ப்பாணத்தின் மிக உயரமான குடியிருப்பு அடையாளமாக மாற உள்ளது, இது இணையற்ற ஆடம்பர வாழ்க்கை வசதிகளை வழங்குகிறது மற்றும் பிராந்தியத்தின் வாழ்வியலை மறுவரையறை செய்கிறது.
யாழ்ப்பாணத்தின் அதி உயர் அற்புதம்: ‘YARL ROYAL PALACE”
இல 107, கண்டி வீதியில், பழைய பூங்காவிற்கு நேர் எதிரே
YARL ROYAL PALACE, இலங்கையின் வட பகுதியில் ஒரு தனித்துவமான திட்டம், நவீன ஆடம்பரம் மற்றும் புதுமையின் அடையாளமாகும். யாழ்ப்பாணத்தில் மிக உயரமான குடியிருப்பு மேம்பாடாக இருக்கும் இது, ஆறு பிரத்தியேக வாகன நிறுத்துமிடங்கள்; மற்றும் பன்னிரெண்டு குடியிருப்பு தளங்களில் நேர்த்தியையும் செயல்பாட்டையும் ஒருங்கிணைக்கிறது.
1 முதல் 3 படுக்கையறைகள் வரையிலான 72 சொகுசு அலகுகளுடன், இந்த வீட்டுத்தொகுதி யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில் இணையற்ற வாழ்க்கையை உறுதியளிக்கிறது.
சிறந்த இடத்தில் அமைந்துள்ள YARL ROYAL PALACE, யாழ்ப்பாணம் சென்ட் ஜான்ஸ் கல்லூரி, சுண்டிக்குளி பெண்கள் கல்லூரி, யாழ்ப்பாண மத்திய கல்லூரி மற்றும் வேம்படி பெண்கள் உயர்நிலைப் பாடசாலை போன்ற சிறந்த பாடசாலைகள், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை போன்ற அத்தியாவசிய சேவைகள் மற்றும் யாழ்ப்பாண ரயில் நிலையம் மற்றும் பலாலி சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய போக்குவரத்து மையங்களுக்கு எளிதான அணுகலை வழங்குகிறது.
நல்லூர் கந்தசுவாமி கோயில், யாழ்ப்பாண கோட்டை மற்றும் பொது நூலகம் போன்ற கலாசார அடையாளங்களுக்கு அருகில் இருப்பதனால் குடியிருப்பாளர்கள் பயனடைகிறார்கள், இது பிராந்தியத்தின் வளமான பாரம்பரியத்துடன் வாழ்க்கை அனுபவத்தை வளப்படுத்துகிறது.
ரியல் எஸ்டேட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் புளு ஓஷன்
குழுவின் வெற்றிக்கான ஒரு முக்கிய காரணி வாடிக்கையாளர் தேவைகள் பற்றிய அதன் ஆழமான புரிதல் மற்றும் நாட்டின் முக்கிய இடங்களில் அதன் திட்ட அமைப்பை மூலோபாய ரீதியாக விரிவுபடுத்தியுள்ளது. இவற்றில் 19வது ஒழுங்கை – கொழும்பு 03, லேயார்ட்ஸ் வீதி – கொழும்பு 04, ஹேவ்லாக் பிளேஸ் – கொழும்பு 05, இராமகிருஷ்ணா வீதி – கொழும்பு 06, ஹோட்டல் வீதி – Mount-Lavinia, De Saram வீதி – Mount-Lavinia, Central Park – ஜா-எல, High-Level வீதி- நுகேகொட, பஹிரவாகந்த பாதை – கண்டி, Glenfall வீதி – நுவரெலியா, மற்றும் கண்டி வீதி – யாழ்ப்பாணம் போன்ற மதிப்புமிக்க முகவரிகள் அடங்கும்.
Blue Ocean இன் தொடர்ச்சியான வளர்ச்சியை ஆதரிக்க, King Alfred House – கொழும்பு 03, Inner Flower Road – கொழும்பு 03, Urban Heights – Wattala, மற்றும் Lillian Avenue – Mount-Lavinia, De Alwis Place – தெஹிவளை உள்ளிட்ட பல முக்கிய திட்டங்களுக்கு ஏற்கனவே பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. கூடுதலாக, Boswell Place – கொழும்பு 06 மற்றும் De Alwis Avenue, Mount-Lavinia போன்ற திட்டங்கள் அவற்றின் இணக்கச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளன.
