02 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான வாநிலை காரணமாக இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பதுளை மாவட்டத்தில் பசறை, ஹாலிஎல, பதுளை, கந்தகெட்டிய, ஊவா பரணகம, மீகஹகிவுல மற்றும் சொரணாதொட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளும், நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு இன்று பகல் 12.30 மணி முதல் நாளை மதியம் 12.30 மணி வரை அமுலில் இருக்கும் என்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version