ட்ரம்ப் – செலென்ஸ்கி இடையே கருத்து மோதல் தீவிரம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடோமிர் செலென்ஸ்கி இடையேயான சந்திப்பின் போது
இருவரிடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

ட்ரம்ப் மற்றும் செலென்ஸ்கி இடையேயான சந்திப்பு வெள்ளை மாளிகையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

பேச்சுவார்த்தை கருத்து மோதலாக மாறியதைத் தொடர்ந்து, நீங்கள் எங்களுக்கு நன்றியுடன் இருக்க வேண்டும் என்றும் நீங்கள் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இணங்காவிட்டால் நாங்கள் இதிலிருந்து வெளியேறிவிடுவோம்” என்றும் ட்ரம்ப் கூறினார்.

“உங்களிடம் போதுமான இராணுவம் இல்லை.நீங்கள் எங்கள் நாட்டை அவமதிக்கிறீர்கள், உங்களால் போரில் வெற்றி பெற முடியாது என்று, நீங்கள் நன்றியுடன் இருக்க வேண்டும், நீங்கள் லட்சக்கணக்கான உயிர்களோடு விளையாடுகிறீர்கள். மூன்றாம் உலகப் போரோடு விளையாடுகிறீர்கள்” என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கனிம வள ஒப்பந்தம் கைச்சாத்தாகும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அதில் முன்னேற்றம் இடம்பெற்றிருக்கவில்லை.

இந்த சம்பவத்திற்குப் பின்னர் ஐரோப்பா மற்றும் மேற்கு நாடுகள் முழுவதிலும் உள்ள தலைவர்கள் செலென்ஸ்கிக்கு ஆதரவை வெளிப்படுத்துகிறார்கள், அவர்கள் உக்ரைன் ஜனாதிபதி மற்றும் மக்களுடன் நிற்பதாகக் கூறுகிறார்கள்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version