அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் மற்றும் சந்தோஷ் ஜா இடையே சந்திப்பு

அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்திற்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்று நடைபெற்றது.

தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்,ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகள்,ஊடகப் பயிற்சிகள்
உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.

இந்தியாவில் நடைமுறையில் உள்ள நவீன ஊடக யுக்திகள் ,அச்சு ,இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகங்கள்
தொடர்பிலான பயிற்சி நெறிகளை இலங்கையிலும் வழங்குவதற்கு நடவடிக்கைகளை எடுப்பதாக இந்திய
உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் ஊடகவியலாளர்களுக்கும் வீடுகளைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பான
யோசனை ஒன்றும் உயர்ஸ்தானிகரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இவை உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கி மனு ஒன்றும் இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்பட்டது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version