முதலிட அணியாக அரை இறுதியில் இந்தியா

பாகிஸ்தான், மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் சம்பியன் கிண்ண தொடரின் அரை இறுதியில் இந்தியா அணி முதலிட அணியாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் குழு A இல் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இரு அணிகளுக்குமான குழு நிலைப்போட்டி நேற்று(02.03) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா அணி 44 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. இதன் படி இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் ஒரு அரை இறுதிப் போட்டியும், நியூசிலாந்து-தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையில் மற்றுமொரு அரை இறுதிப் போட்டியும்
நடைபெறவுள்ளன.

நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்தியா அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்ளை இழந்து 249 ஓட்டங்களை பெற்றது. இதில் ஷ்ரேயாஸ் ஐயர் 72 ஓட்டங்களையும், ஹார்டிக் பாண்ட்யா 45 ஓட்டங்களையும், அக்சர் பட்டேல் 42 ஓட்டங்களையும், பெற்றனர். நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சில் மட் ஹென்றி 5 விக்கெட்களை கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பாடிய நியூசிலாந்து அணி 45.3 ஓவர்களில் சகல விக்கெட்ளையும் இழந்து 205 இழந்து ஓட்டங்களை பெற்றது. கேன் வில்லியம்சன் 81 ஓட்டங்களையும், மிச்செல் சென்டனர் 28 ஓட்டங்களை பெற்றார். இந்திய அணியின் பந்துவீச்சில் வருண் சக்கரவத்தி 5 விக்கெட்ளை கைப்பற்றினார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version