நாடு முழுவதும் சுகாதார தொழிலாளர்கள் அடையாள வேலைநிறுத்தம்

நாடு முழுவதும் உள்ள சுகாதார தொழிலாளர்கள் மார்ச் மாதம் 06ஆம் திகதி காலை 6 மணியிலிருந்து அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று (03) திட்டமிடப்பட்ட சுகாதாரத் துறையுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், சுகாதார தொழிற்சங்கத் தலைவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர்.

சுகாதார நிபுணர்களின் கொடுப்பனவுக் குறைப்பைத் திருத்துவதற்கு சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவுக்கு வழங்கப்பட்ட நேரம் இன்றுடன் முடிவடைகிறது என்று பிரதிநிதிகள் மேலும் தெரிவித்தனர்.

அடையாள வேலைநிறுத்தத்திற்கு வைத்தியர்களும் தங்கள் ஆதரவை வழங்கியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், குழந்தைகள் வைத்தியசாலைகள், புற்றுநோய் வைத்தியசாலைகள், மகப்பேறு வைத்தியசாலைகள் மற்றும் சிறுநீரக வைத்தியசாலைகளில் வேலைநிறுத்தம் செயல்படுத்தப்படாது என்று வைத்தியசாலைகளின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ ஒரு தாதியின் சம்பளம் தொடர்பாக பாராளுமன்றத்தில் வெளியிட்ட அறிக்கை தவறானது என்று சுகாதார தொழிற்சங்க அமைப்பின் (HTUA) ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

சுகாதார நிபுணர்களைப் பாதிக்கும் குறிப்பிடத்தக்க சம்பள ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்ய வரவு செலவுத்திட்டத்தில் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சுகாதார நிபுணர்களைப் பாதிக்கும் சம்பள ஏற்றத்தாழ்வு தீர்க்கப்படவில்லை என்றும், அவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளில் வெட்டுக்கள் கடுமையானவை என்றும் அவர் வலியுறுத்தினார்.

சுகாதார அமைச்சரிடமிருந்து இந்தப் பிரச்சினை குறித்து எந்தப் புரிதலும் இல்லை என்றும், தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version