ஜீவன் தொண்டமான் உட்பட 10 பேருக்கு பிணை

கடந்த வருடம் மே மாதம் 30ஆம் திகதி களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட பீட்றூ தோட்ட தொழிற்சாலையில் அத்துமீறி நுழைந்ததாக குற்றச்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு எதிராக பெருந்தோட்ட நிறுவனத்தினர் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து இன்று (03) குறித்த வழக்கு நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இவ் வழக்கு எதிர்வரும் ஜு மாதம் ஒன்பதாம் திகதிக்கு இவ் வழக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் குறித்த வழக்கில் சந்தேக நபர்களாக ஜீவன் தொண்டமான் உட்பட மொத்தமாக 10 சந்தேக நபர்களின் பெயர்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று 5 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கானது எதிர்வரும் ஜுலை மாதம் 09 திகதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இவ்வழக்கில் ஜீவன் தொண்டமான் சார்பாக சிரேஷ்ட கட்டத்தரணி பெருமாள் ராஜதுரை மற்றும் சான் குலத்துங்க சமூகமளித்தனர்.

அதேநேரம் களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சார்பாக பாலித்த சுபசிங்க மற்றும் சுரேஷ் கயான் ஆகியோர் பிரசன்னம் ஆஜராகியிருந்தனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version