உள்ளூராட்சி தேர்தல் – மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்திய சுதந்திரக்கட்சி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, மன்னார் மாவட்ட தேர்தல்
அலுவலகத்தில் இன்றைய தினம் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் என்.எம்.எம்.பாரீஸ் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய தீப் லொக்கு பண்டார இணைந்து கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை,நானாட்டான் பிரதேச சபை ,முசலி பிரதேச சபை ,மாந்தை மேற்கு பிரதேச சபை
ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

மன்னார் பிரதேச சபை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றமையால் மன்னார் பிரதேச
சபைக்கான தேர்தல் குறித்து உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையிலே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மன்னார் மாவட்டத்தில் நான்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கான
கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளது.

இம்முறை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கூட்டாக இணைந்து போட்டியிடுவதனால் பொதுஜன ஐக்கிய முன்னணியின்
கதிரை சின்னத்தில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version