சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 08 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.எம்.கே.டி.பலிஸ்கர, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து நிதிக் குற்ற விசாரணைப் பிரிவின் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிபி மெதவல அமைச்சரின் பாதுகாப்பு பிரிவில் இருந்து விசேட பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.
மனித உரிமைகள் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.ஏ.எதிரிமான்ன, காலி பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கே.ஜி.பி.பி சமரபால, எஸ்.எம்.கே.சி திலகரத்ன, பிஜி தர்ஷன், எல்.ஏ.டி ரத்னவீர, கே.என் குணவர்தன ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்ட ஏனைய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாவர்.