மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்கள் கொழும்புக்கு அழைப்பு

மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்கள் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அவர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக
தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணி இம்மாதம் 17ஆம் திகதி ஆரம்பமாகி 20 ஆம்
திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடையும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இதுவரை 88 உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக 10 அரசியல் கட்சிகளும் 38 சுயேச்சைக் குழுக்களும்
கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version