வவுனியா மாவட்ட பழைய மாணவர் ஒன்றியம் ஐக்கிய இராச்சியம் ,வவுனியா சங்கமம் என்ற பெயரைக் கொண்டு இங்கிலாந்தில் கடந்த ஆண்டு முதல் இயங்கி வருகின்றது.
எமது தேசத்தின் உறவுகளாக இங்கிலாந்தில் ஒன்று கூடி மகிழ்வது மட்டுமல்லாமல் எமது தேசத்தின் மாணவச் செல்வங்களின் கல்வி மேம்பாட்டிலும் எல்லைப்புறக் கிராமங்களின் முன்னேற்றத்திலும் பங்குகொள்வதற்குமாக உருவாக்கப்பட்ட “வவுனியா பழைய மாணவர் ஒன்றியம், ஐக்கிய இராச்சியம் “ வவுனியாவில் முதன் முறையாக பிரமாண்டமான முறையில் “வவுனியா சங்கமம்” அறிமுக விழா ஒன்றை நடாத்தவுள்ளது.
இம்மாதம் 22 ஆம் திகதி சனிக்கிழமை காலை ஒன்பது மணிக்கு வவுனியா நகரசபை மண்டபத்தில் ஆரம்பமாகும் இந்த நிகழ்வில் 25 முன்பள்ளிகளுக்கான தொலைக்காட்சி மற்றும் பென் டிரைவ் (Pen Drive) வழங்குதல், “சங்கமம் 2024” நூல் அறிமுகம் , வவுனியா சங்கமத்தின் வவுனியா மாவட்டத்திற்கான இணைப்பாளர்களை அறிமுகப்படுத்தல் , கலை கலாச்சார மேடை நிகழ்ச்சிகள்,அறிமுக கலந்துரையாடல் மற்றும் மதிய போசனத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவுபெறும்.
இந்நிகழ்வைச் சிறப்பிக்க வவுனியா மாவட்ட பழைய மாணவர்களை கலந்து கொள்ளுமாறு நிர்வாகத்தினர் அன்புடன் அழைக்கின்றனர்.
