இராமநாதன் அர்ச்சுனா மீது தற்காலிகமாக தடை

நாடாளுமன்ற மரபுகளுக்கு மாறாக செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது தற்காலிகமாக தடை  விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன  தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே (19.03) அவர் இதனைத் தெரிவித்தார்.

இதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் வௌியிடும் கருத்துக்களை குரல் பதிவு, காணொளி வடிவில் சமூக வலைத்தளங்களில் நேரடியாக ஒளிபரப்புவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் தெரிவித்தார்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அவ்வப்போது தெரிவிக்கும் அவமதிக்கும், அநாகரீகமான மற்றும் இழிவான கருத்துக்கள் ஹன்சாட் பதிவுகளில் இருந்து நீக்கப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.

இதன்படி, நாளை (20) முதல் மே மாதம் 08 ஆம் திகதி வரை நடைபெறும் நாடாளுமன்ற அமர்வுகளில் அர்ச்சுனா தெரிவிக்கும் கருத்துக்கள் ஔிபரப்பப்படமாட்டாது.

குறித்த காலகட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரின் நடத்தையின் அடிப்படையில் இந்தத் தற்காலிக தடை, நீக்கம் நீக்கப்படுவது குறித்து

 பரிசீலிக்கப்படும் என சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version