“சலாம் ரமழான்” ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான பன்முக கலாச்சார நிகழ்வு

மதம், சாதி, இனம்,நம்பிக்கை அல்லது கலாசார பின்னணியைப் பொருட்படுத்தாமல், தனித்துவமான மற்றும் துடிப்புள்ள “சலாம் ரமழான்”
கொண்டாட்டத்தில் இன்று முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி இணைந்து கொள்ளுமாறு மேல் மாகாண ஆளுநர் அலுவலகம், அனைத்து இலங்கையர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

எம் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒற்றுமையை உணர்வை வௌிப்படுத்தும் இந்த சிறப்பான நிகழ்வு கொழும்பு கிரீன் பாத்தில் ஒவ்வொரு நாளும் மாலை 05 மணி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேல் மாகாண ஆளுநர் அலுவலகம் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அதன் வளமான கலாச்சார பன்முகத்தன்மையை தொடர்ந்தும் கொண்டாடும் நிலையில், “சலாம் ரமழான்” நாட்டின் நான்கு முஸ்லிம் பிரிவுகளை முதன்முறையாக உணவு, கலாச்சாரம் மற்றும் ஒற்றுமையின் கண்கவர் காட்சியில் ஒன்றிணைக்கிறது.

Moor, Memon, Malay மற்றும் Borah சமூகங்கள் தங்களது தனித்துவமான உணவு வகைகளை வழங்கவுள்ளதுடன், இந்த நிகழ்வு இலங்கையின் நாலாத் திசைகளிலிலும் உள்ள முஸ்லிம் சமூகத்தின் சிறந்த உணவுகளை ருசிக்கக் கூடியவாறு அனைவருக்கும் மறக்க முடியாத சந்தர்ப்பத்தை வழங்கவுள்ளது.

இந்த நிகழ்வில் பல்வகைப்பட்ட உணவு வகைகளை உள்ளடக்கி முக்கிய ஹோட்டல்கள் மற்றும் உணவு விற்பனையாளர்களினால் 50 இற்கும் மேற்பட்ட உணவு விற்பனைக் கூடங்கள் இங்கு அமைக்கப்படவுள்ளன.

இது குடும்ப நட்பு நிகழ்வு என்பதுடன் அனைத்து வயதுப் பிரிவினரும் பல்வேறு வகையான பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார அனுபவங்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.

முஸ்லிம் மக்கள் நோன்பு திறப்பதற்கும், பிரார்த்தனை செய்வதற்குமான வசதிகளையும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்துள்ளது.

“சலாம் ரமழான்” விருந்தோம்பலிலும், மகிழ்ச்சியிலும் அரவணைப்பிலும் கலந்துகொள்ள, கலாச்சார பின்னணிக்கு அப்பாற்பட்டு, உங்கள் குடும்பத்தினரையும் நண்பர்களையும் அழைத்து வாருங்கள்.

இந்த சிறப்பான நிகழ்வு பன்முகத்தன்மையை கொண்டாடும், சமூக பிணைப்புகளை வலுப்படுத்தும், அத்துடன் அனைவருக்கும் சுவையான உணவு, கலாச்சார அனுபவங்கள் மற்றும் நீடித்த நினைவுகளை வழங்கும் ரமழானின் உண்மையான உணர்வைத் வழங்கவுள்ளது.

வரலாற்றில் முதன்முறையாக அனைத்து மதங்களின் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையின் மறக்கமுடியாத அனுபவத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைவோம்” என தெரிவித்துள்ளது.

மேலதிக தகவல்களுக்கு, தொடர்பு கொள்ளவும்

மேல் மாகாண ஆளுநர் அலுவலகம்
ரமழான் பணிக்குழு

தொலைபேசி இலக்கம்: 0773110505/ 0778699203/0777530508/0777881628

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version