கொட்டிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபையின் முன்னாள் துணைத் தலைவரான ஊடகவியலாளர் பிரின்ஸ் குணசேகர, ‘மொட்டு’ கட்சியில் தமது பதவியை ராஜினாமா செய்து, இம்முறை மாகாண சபை தேர்தலில் ‘டிவி ஒன்’ சின்னத்தின் கீழ் சுயேச்சைக் குழுவில் இணைந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
1994 ஆம் ஆண்டு முதல் 31 வருடங்களாக கொட்டிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபையின் தோற்காத உறுப்பினராக இருந்து வரும் இவர், கடந்த அரகலய போராட்ட காலத்தில் நடந்த தாக்குதலைக் கண்டித்து கட்சி அரசியலில் இருந்து விலகினார்.
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில் “இளைஞர்கள் தாக்கப்பட்டதை அடுத்து நான் மொட்டு கட்சியில் இருந்து ராஜினாமா செய்தேன். கடந்த ஆட்சியின் போது, எனக்கு தலைவர் பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும், எனினும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அது வழங்கப்படும் என்று கூறி மக்கள் ஏமாற்றப்பட்டனர்.
தகுதியானவர்களை கருத்தில் கொள்ளாத ஒரு கட்சிக்கு ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் பிற நிபுணர்கள் எவரும் பக்கபலமாக இருக்க வேண்டாம் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் நல்ல தலைமையின் கீழ், மிகவும் திறமையான அணியான ‘டிவி ஒன்’ சின்னத்தில் போட்டியிடும் ஒரு சுயேச்சை அணிக்கு அனைவரும் வாக்களிக்கலாம்,” என்று பிரின்ஸ் குணசேகர தெரிவித்துள்ளார்.