பங்களாதேஷ் அணியின் முன்னாள் கேப்டன் தமீம் இக்பால் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த போது, திடீரென நெஞ்சு வலியால் கீழே விழுந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து
அவரின் உடல்நிலை மோசமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
பங்களாதேஷ் அணியின் கேப்டனாக செயல்பட்டவர் தமீம் இக்பால். பங்களாதேஷ் அணிக்காக 70 டெஸ்ட் போட்டிகள், 243 ஒருநாள் போட்டிகள் மற்றும் 78 டி20 போட்டிகளில் ஆடி இருக்கிறார்.
பங்களாதேஷ் கிரிக்கெட் வளர்ச்சியில் ஷகிப் அல் ஹசனுக்கு பின் அதிக பங்காற்றியவர் தமீம் இக்பால் தான். கடந்த டி20 உலகக்கோப்பைக்கு பின் தமீம் இக்பால் ஓய்வை அறிவித்தார்.
இருந்தாலும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் தமீம் இக்பால் விளையாடி வருகிறார். இந்த நிலையில் டாக்கா அருகே நடைபெற்ற கிளப் போட்டியில் தமீம் இக்பால் விளையாடிய போது, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மைதானத்திலேயே விழுந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து உடனடியாக அவரை மருத்துவமனை அழைத்து செல்ல ஹெலிகொப்டர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கு முன்பாக அருகில் இருந்த மருத்துவமனையில் தமீம் இக்பால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதனை பரிசோதித்த மருத்துவர்கள் தமீம் இக்பாலுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை உறுதி செய்துள்ளனர்.
பின்னர் அவரை டாக்காவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமீம் இக்பால் ஹெலிகாப்டரில் பயணித்த போது, மீண்டும் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
இதனால் மீண்டும் மருத்துவமனைக்கு திரும்பியுள்ளனர். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், இதுகொஞ்சம் கடினமான நேரம்தான். அவர் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார். அவர் முழு உடல்நலத்துடன் வீடு திரும்புவதற்கு மருத்துவர்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
இதனால் பங்களாதேஷ் கிரிக்கெட் இரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.