வழிபாடுகளுடன் இ.தொ.கா வின் பிரசார பணிகள் ஆரம்பம்

நுவரெலியா மாவட்டத்தில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசார பணிகளை இலங்கை தொழிலார் காங்கிரஸ் ஆரம்பித்துள்ளது.

கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலயத்தில் இன்றைய தினம் (29.03) இடம்பெற்ற சிறப்பு வழிப்பாட்டு பூஜைகளுடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசார பணிகளை இலங்கை தொழிலார் காங்கிரஸ் ஆரம்பித்துள்ளது.

தொடர்ந்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பொன்றும் கொட்டகலை சி.எல்.எப் வளாகத்தில் இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வின்போது இ.தொ.காவின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளரும் நிதிச் செயலாளருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டார்கள்.

மேலும் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இம்முறை, கொட்டகலை, நோர்வூட், மஸ்கெலியா, அக்கரபத்தனை, நுவரெலியா, ஹட்டன் – டிக்கோயா, தலவாக்கலை – லிந்துலை, அம்பகமுவ, கொத்மலை, ஹங்குராகெத்த, நுவரெலியா மாநகர சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களில் சேவல் சின்னத்திலும், வலப்பனை பிரதேச சபையில் கதிரை சின்னத்திலும் போட்டியிடுகின்றது.

இதில் மஸ்கெலியா மற்றும் கொத்மலை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களின் வேட்புமனுக்கள் ஒரு சில முரணான காரணங்களினால் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில், நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கல் தொடர்பில் இ.தொ.கா சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version