மியன்மார் நிலநடுக்கம் – எதிர்க்கட்சித் தலைவர் கவலை

மியன்மாரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
கவலை வெளியிட்டுள்ளார்.

ஏராளமான சொத்துக்களும் அழிந்துள்ளன. இந்த அவல நிலையை எதிர்கொண்ட மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும்
வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

இந்த அனர்த்தத்தில் காணாமற் போன மக்கள் மற்றும் விலங்குகளின் உயிர்களை பாதுகாக்க உரிய தரப்புகளுக்கு
இயலுமை கிட்டட்டும் என பிரார்த்திக்கின்றேன்.

இம்மக்களுக்கு இயன்ற அதிகபட்ச உதவிகளையும், நிவாரணங்களையும், அவசர மனிதாபிமான மீட்பு நடவடிக்கைகளையும்
பெற்றுக் கொடுக்குமாறு உலகின் செல்வந்த நாடுகளிடம் கௌரவத்துடன் கேட்டுக்கொள்கின்றன்” என்றார்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version