மியன்மார் மண்டலே நகரிற்கு அருகே 5.1 ரிக்டர் அளவில் புதிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மியன்மாரில் பதிவான நிலநடுக்கம் காரணமாக இதுவரை 1700 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மண்டலே நகரத்திலிருந்து சுமார் 17.2 கிலோ மீற்றர் தொலைவில் நேற்று முன்தினம் (30.03) இந்த நிலநடுக்கம் பதிவானது.
இதனால் கட்டிடங்கள் பல இடிந்து வீழ்ந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் மியன்மார் மற்றும் தாய்லாந்தில் மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.