ஷம்மி சில்வா இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ தேர்தல் கொழும்பில் இன்று(31.03) முற்பகல் இடம்பெற்றது.
இதற்கமைய 2025 முதல் 2027 வரையான காலப்பகுதிக்காக ஷம்மி சில்வா இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக செயற்படவுள்ளார்.
ஷம்மி சில்வா நான்காவது தடவையாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அத்துடன், பிரதித் தலைவர்களாக ஜயந்த தர்மசேன மற்றும் ரவின் விக்ரமரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
செயலாளராக பந்துல திசாநாயக்கவும், பொருளாளர் பதவிக்கு சுஜீவ கொடலியத்தவும் தெரிவு செய்யப்பட்டுள்ள அதேவேளை, உப செயலாளர் பதவிக்கு கிரிஷாந்த கப்புவத்தவும் உப பொருளாளராக லவந்த விக்ரமசிங்கவும் தெரிவாகியுள்ளனர்.