பெட்மென் (Batman) மற்றும் தி டோர்ஸ் (The Doors) போன்ற படங்களில் நடித்துள்ள, பிரபல ஹொலிவுட் நடிகர் வால் கில்மர் (Val Kilmer) தனது 65 ஆவது வயதில்
காலமானார்.
நிமோனியா நோய் தாக்கத்தினால் அவர் நேற்று (01.04) காலமானதை அவரது மகள் மெர்சிடிஸ் கில்மர் உறுதிப்படுத்தியுள்ளார்.
வால் கில்மருக்கு 2014 ஆம் ஆண்டு தொண்டை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு, பின்னர் அவர் குணமடைந்ததாகவும் மெர்சிடிஸ் கில்மர் தெரிவித்துள்ளார்.
1984 ஆம் ஆண்டு டொப் சீக்ரெட் (Top Secret) என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான வால் கில்மர், டொப் கன் (Top Gun),
ரியல் ஜீனியஸ் (Real Genius), வில்லோ (Willow), ஹீட் (Heat), தி செயின்ட் (The Saint) போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
அவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, வால் (Val) என்ற ஆவணப்படமும் வெளியானது.
அவருடைய மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
வால் கில்மரின் இழப்பு இரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.