இன்று (05.04) மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களின் கடலோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மக்கள் பாதுகாப்பாக செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.