மதுபோதையில் வாகனம் செலுத்திய 800 சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

கடந்த 02 நாட்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 800 சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

தமது சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் கொழும்புக்கு வருகை தருவதால் வீதிகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதனால் வீதிகளில் வாகன விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த நாட்களில் நாளொன்றுக்கு சுமார் 05 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடுமையான காயங்கள் ஏற்பட்ட 10 இற்கும் மேற்பட்ட சந்தர்ப்பங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் போக்குவரத்து விதிகளுக்கமைய வாகனம் செலுத்துமாறு பொலிஸார் சாரதிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
Facebook
Twitter
Reddit
Linkedin
Pinterest
MeWe
Mix
Whatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version