கண்டி நகர எல்லைக்குட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை நீடிப்பு

புனித தலதா மாளிகைக்கான யாத்திரை காரணமாக கண்டி நகர எல்லைக்குட்பட்ட பாடசாலைகளுக்கு
இன்று திங்கட்கிழமை முதல் 25 ஆம் திகதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தலதா மாளிகை யாத்திரைக்காக தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நாட்களின் எண்ணிக்கை நீட்டிக்கப்பட்டால், குறித்த பாடசாலைகளின்
விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் மற்றும் முப்படையினரை தங்க வைப்பதற்காக இந்த பாடசாலைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் குறித்தப் பாடசாலைகள் யாத்திரைக்கு வருகை தரும் ஊனமுற்றோர் மற்றும் முதியவர்களுக்குத் தேவையான தங்குமிட வசதிகளை வழங்கவும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version