இலங்கை மகளிர் மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கிடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற முக்கோண ஒரு நாள் சர்வதேசப் போட்டி தொடரின் முதற் போட்டியில் இந்தியா மகளிர் அணி 09 விக்கெட்களினால் வெற்றி பெற்றுள்ளது.
மழை காரணமாக 39 ஓவர்களாக மாற்றப்பட்ட போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் இலங்கை அணி 38.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 147 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் ஹாசினி பெரேரா 30 ஓட்டங்களையும், கவிஷா டில்ஹாரி 25 ஓட்டங்களையும் பெற்றனர். இந்திய அணியின் பந்து வீச்சில் ஸ்னே ரானா 3 விக்கெட்களையும், ஸ்ரீ சரணி 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள். ஸ்ரீசரணி இன்று தனது அறிமுகத்தை மேற்கொண்டார்.
பதிலுக்கு துடுப்பாடிய இந்திய மகளிர் அணி ஓவர்களில் விக்கெட்களை இழந்து ஓட்டங்களை பெற்றது. இதில் ஸ்மிரிதி மந்தானா 43 ஓட்டங்களையும், பிரட்டிகா ரவால் ஆட்டமிழக்காமல் ஓட்டங்களையும் பெற்றனர், ஹர்லீன் டியோல் ஆட்டமிழக்காமல் ஓட்டங்களையும் பெற்றனர்.
நாளை மறுதினம் இந்தியா, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறவுள்ளது.