இன்றைய வாநிலை..!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், வடமேல் மாகாணங்களிலும் மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறுவுறுத்தியுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version