களனி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அரசாங்க காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்திய சம்பவம் தொடர்பில் தம்மை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கல் செய்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணையின்றி தள்ளுபடி செய்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி மொஹமட் லாபர் தாஹிர் மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.