பாணந்துறையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி

களுத்துறை மாவட்டம் பாணந்துறையில் உள்ள ஹிரணை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார்.

மேற்கு மாலமுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நடைபெற்ற விருந்து ஒன்றின் போது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேற்கு மாலமுல்ல பகுதியைச் சேர்ந்த 35 வயது நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் T-56 வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக முதல்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஹிரணை மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும், சம்பவத்தின் பின்னணி மற்றும் தாக்குதலின் நோக்கம் குறித்து விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version