மேல், சபரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வட-மத்திய, வடமேற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கு பலத்த காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அந்தப் பகுதிகளில் மணிக்கு 50-60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீட்டர் வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும் என்றும் மக்கள் அவதானமாக செயற்படுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.