அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று!

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணப்புக்குழு கூட்டம் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் இன்று புதன்கிமை (11.06) பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இம்மாவட்டத்தில் ஒருங்கிணப்புக்குழுவின் புதிய தலைவராக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி நியமிக்கப்பட்டதினையடுத்து அவரின் தலைமையில் இடம்பெறும் முதலாவது கூட்டம் குறித்த தினத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டம் நடைபெறுவதற்கு முன்னர் மாவட்டத்தினது நிலைமைகள் தொடர்பாக அரச அதிகாரிகளிடமிருந்து தகவல்களை அறிந்து கொள்ளும் விசேட கூட்டம் ஒன்றினை ஒருங்கிணைப்புத் தலைவர் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்தார். இக்கூட்டத்திற்கு மாவட்டத்தின் பாரளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட 14 பிரதேச செயலாளர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரனின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை இடம்பெறவுள்ள இக்கூட்டத்திற்கு வழமைபோன்று மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர்கள், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், சமுக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இக்கூட்டத்தினைத் தொடர்ந்து திராய்மடு புதிய மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் காரியாலயம் திறந்து வைக்கப்படவுள்ளது.

Social Share

Leave a Reply