நெடுந்தீவு மற்றும் சிலாபம் கடற்கரைகளில் ஒதுங்கியுள்ள Plastic Pellets குறித்து உடனடியாக பணிப்புரை!

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள், நேற்று (12.06) நெடுந்தீவு மற்றும் சிலாபம் கடற்கரைகளில் ஒதுங்கியுள்ள Plastic Pellets குறித்து உடனடியாக விரிவான ஆய்வொன்றை மேற்கொள்ளுமாறு தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிலையத்திற்கு (NARA) பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த Plastic Pellets கடற்கரையில் ஒதுங்கியிருப்பதன் மூலம் கடல் சூழலியல் மற்றும் கடற்கரையோர சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்படக்கூடிய பாதகமான தாக்கங்கள் குறித்து அமைச்சர் தனது தீவிர கவனத்தைச் செலுத்தியுள்ளார். கடல் மாசடைதல், குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் மாசடைதல், சுற்றுச்சூழலுக்கும் கடல்வாழ் உயிரினங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால், இந்த நிலைமை குறித்து உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நாரா நிறுவன அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவித்தார்.

இந்த Plastic Pellets வந்த வழி, அவற்றின் தாக்கம் மற்றும் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்களைத் தவிர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஒரு விஞ்ஞான ரீதியான அறிக்கை ஒன்றின் அவசியத்தை அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
Facebook
Twitter
Reddit
Linkedin
Pinterest
MeWe
Mix
Whatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version