இலங்கைக்கெதிராக பங்களாதேஷ் பலமான நிலையில்

இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதல் துடுப்பாடி வரும் பங்களாதேஷ் அணி பலமான நிலையில் காணப்படுகிறது.

இரண்டாம் நாள் மதியபோசன இடைவேளையின் போது பங்களாதேஷ் அணி 117 ஓவர்களில் 04 விக்கெட்களை இழந்து 383 ஓட்டங்களை பெற்றுள்ளது.

சிறப்பாக துடுப்பாகிய நஜிமுல் ஹொசைன் சான்டோ 148 ஓட்டங்களை பெற்று இன்று ஆட்டமிழந்தார். இது அவரின் ஆறாவது டெஸ்ட் சதமாகும். தொடர்ந்தும் சிறப்பாக துடுப்பாடி வரும் முஸ்பிகீர் ரஹீம் ஆட்டமிழக்கமால் 141 ஓட்டங்களை பெற்றுள்ளார். 12 ஆவது சதத்தை அவர் பூர்த்தி செய்துள்ளார். இலங்கை அணிக்கெதிராக நான்காவது சதமாகும். லிட்டோன் டாஸ் ஆட்டமிழக்காமல் 43 ஓட்டங்களை பெற்றுள்ளார். பங்களாதேஷ் அணியின் ஆரம்ப விக்கெட்கள் வேகமாக வீழ்த்தப்பட்ட போதும், சிறந்த மீள்வருகையை ஏற்படுத்தி பலமான நிலைக்கு சென்றுள்ளனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ, தரிந்து ரத்நாயக்க ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றியுள்ளனர்.

Social Share

Leave a Reply