நோயர்களுக்கு ஏற்பட்ட பெரும் நஷ்டம்

2022 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால், அரசாங்க வைத்தியசாலைகளுக்கு 17,500 ரூபாய்க்கு வழங்கப்பட்ட மருந்தை வைத்தியசாலைக்கு வெளியே 120,000 முதல் 250,000 விற்று ஊழல் செய்யப்பட்டுள்ளாதாக ஊழல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த மருந்தின் தற்போதைய விலை கிட்டத்தட்ட 46,500 ரூபா என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர அரச வைத்தியசாலையில் இந்த மருந்து ஊழலில் ஈடுபட்ட பிரபல நரம்பியல் வைத்தியர் மஹேஷி சுரசிங்க அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார். அவரின் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவர் மூலமாக இந்த ஊழல் நடத்தப்பட்டுள்ளது. அவரும் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை, வைத்தியசாலையின் எழுது விளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரச வைத்தியசாலைகளில் பெறக்கூடிய மருந்தை, மூன்றாம் நபர்களிடமும், தனது நிறுவனத்திலும் பெற்றுக்கொள்ள முடியுமென பரிந்துரை செய்து நோயாளர்களுக்கு கிட்டத்தட்ட 30 கோடி ரூபா நஷ்டம் ஏற்படுத்தியுள்ளதாக குறித்த நரம்பியல் நிபுணர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியரிடம் 300 அளவிலான நோயாளரக்ள் சத்திரசிகிச்சை பெற்றுள்ளதாகவும், அவர்களில் 77 பேரிடம் வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளதாகவும், மேலும் சிலர் இறந்து விட்டுட்டதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version