பதவி உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி, இன்று (19.06) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ரயில்வே திணைக்கள கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் செயலாளர் கே.டி. துமிந்த பிரசாத் இன்று(19.06) காலை ரயில்வே அதிகாரிகளுடன் தங்கள் கோரிக்கைகள் குறித்து கலந்துரையாடிய பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இந்த தீர்மானத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.