தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த தேசிய லொத்தர் சபை முன்னாள் நிர்வாக இயக்குநர் துசித ஹல்லோலுவவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
துசித ஹல்லோலுவ இன்று (20.06) காலை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தலா 200,000 ருபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார், மேலும் நீதிமன்றம் அவருக்கு பயணத் தடை விதித்துள்ளது.
தேசிய லொத்தர் சபை சொந்தமான அரசாங்க சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பில் இவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.