பங்களாதேஷ் இன்னிங்ஸ் நிறைவு

இலங்கை, பங்களாதேஷ் டெஸ்ட் இரண்டாம் நாள். கொழும்பு SSC மைதானத்திலிருந்து நேரடி.SriLankaVsBangaladesh

பங்களாதேஷ் இன்னிங்ஸ் நிறைவு

இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று (25.06) கொழும்பு SSC மைதானத்தில் ஆரம்பித்து, இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. முதல் நாளில் இலங்கை அணி ஆதிக்கம் செலுத்தி 8 விக்கெட்ளை கைப்பற்றிய நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆரம்பித்து சிறிது நேரத்துக்குகள் மிகுதி இரண்டு விக்கெட்களும் வீழத்தப்பட்டன.

பங்களாதேஷ் அணி 71 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 220 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷட்மன் இஸ்லாம் 46 ஓட்டங்களை பெற்றார். மொமினுல் ஹக் 21 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சதமடித்த நஜ்முல் ஹொசைன் சான்டோ 8 ஓட்டங்க்ளுடன் ஆட்டமிழந்தார். முஸ்பிகீர் ரஹீம், லிட்டன் டாஸ் 67 ஓட்டங்களை பகிர்ந்தனர். டாஸ் 34 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். ரஹீம் 35 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். மெஹ்தி ஹசன் மிராஸ் 31 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 3 விக்கெட்களை கைப்பற்றினார். விஸ்வ பெர்னாண்டோ இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார். தனஞ்சய டி சில்வா, தரிந்து ரத்நாயக்க ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள். இலங்கை அணியின் களத்தடுப்பு கடந்த போட்டியிலும் சிறப்பாக அமையவில்லை. இந்த போட்டியிலும் முன்னேற்றம் காணப்பட்டாலும், இன்னமும் முன்னேற்றம் காணவேண்டும்.

தனது டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்ட சகலதுறை வீரர் சொனால் டினுஷ தனது கன்னி விக்கெட்டை இரண்டாவது ஓவரில் கைப்பற்றினார். தொடர்ச்சியாக 9 ஓவர்கள் வீசிய சொனால் 2 விக்கெட்களை நேற்று கைப்பற்றினார். இன்று பந்து வீச வந்து முதல் பந்திலேயே விக்கெட்டைகைப்பற்றினார் . சொனால் டினுஷ்க பந்துவீச்சு, களத்தடுப்பு என சிறப்பாக செயற்படுவதை பார்க்கக்கூடியதாக அமைந்தது. துடுப்பாட்டத்திலும் பிரகாசித்தால் இலங்கை அணிக்கு சிறந்த சகலதுறை வீரராக அமைவார். இந்தப் போட்டியில் அஞ்சலோ மத்தியூஸ் ஓய்வு பெற்று அணியை விட்டு விலகியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக சொனால் டினுஷ டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்டுள்ளார். இலங்கை அணி சார்பாக டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொள்ளும் 170 ஆவது வீரர் ஆவார். ஆனால் அவர் நான்காமிடத்தில் களமிறங்கப்போவதில்லை. இலங்கை அணியின் தலைவர் தனஞ்சய டி சில்வா நான்காமிடத்தில் துடுப்பாடவுள்ளார். இந்த விடயங்களை நேற்று முன் தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தனஞ்சய டி சில்வா தெரிவித்திருந்தார்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடும் அணிக்கு இந்த மைதானத்தில் வெற்றி வாய்ப்புகள் அதிகம். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதக தன்மையினையும் இந்த மைதானம் வழங்கியுள்ளது. பங்களாதேஷ் அணியின் ஆதிக்கத்தை இலங்கை அணி உடைத்துள்ள நிலையில், முதல் இன்னிங்சில் சிறப்பாக துடிப்பாடினால் இலங்கை அணிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம். இன்றைய நாள் முழுவதும் துடுப்பாடி, நாளைய தினமும் துடிப்பாடினார் இலங்கை அணி வெற்றி பெறுவது உறுதி

நேற்றைய தினம் மழை காரணமாக போட்டி பாதிப்புக்குள்ளானதால் 19 ஓவர்கள் வீசப்படவில்லை. இதன் காரணமாக காலை 9.45 இற்கு போட்டி ஆரம்பித்தது. 98 ஓவர்கள் இன்று வீசப்படவேண்டும். காலை வேளையில் மழை பெய்த போதும் மைதானம் பாதிப்புக்குளாகவில்லை. வெயில் காணப்படுகின்ற போதும் அங்கங்க கரு முகில்களும் தென்படுகின்றன.

இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள், இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் இலங்கை அணி சார்பாக விளையாடுகின்றனர். மிலான் ரத்நாயக்க உபாதையடைந்துள்ள நிலையில், கஸூன் ரஜித இந்தப் போட்டியில் விளையாடுகிறார். இரண்டு மாற்றங்கள் மட்டுமே இலங்கை அணியில் நடைபெற்றுள்ளன.

பங்களாதேஷ் அணியில் மெஹதி ஹசன் மிராஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஜேக்கர் அலி நீக்கப்பட்டு, லிட்டன் டாஸ் இணைக்கப்பட்டுள்ளார்.

அணி விபரம்

இலங்கை

பத்தும் நிஸ்ஸங்க, லஹிரு உதார, டினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா, கமிந்து மென்டிஸ், குஷல் மென்டிஸ், சொனால் டினுஷ, பிரபாத் ஜெயசூர்யா, அசித்த பெர்னாண்டோ, விஸ்வ பெர்னாண்டோ, தரிந்து ரத்நாயக்க,

பங்களாதேஷ்

ஷத்மான் இஸ்லாம், அனாமுல் ஹக், மொமினுல் ஹக், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹசன் மிராஸ், நயீம் ஹசன், எபாடோட் ஹொசைன், டைஜூல் இஸ்லாம், நஹிட் ராணா, ஹசன் மஹ்மூட்

Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version