வவுனியா கடைகளில் மேலதிக கொட்டகைகளை அகற்ற அறிவித்தல்

வவுனியா, மாநகரசபை எல்லைக்குள் அமைந்துள்ள கடைகளுக்கு முன்பக்கமாக மேலதிகமாக அமைக்கப்பட்டுள்ள மேலதிக கொட்டகைகளை அகற்றுமாறு மாநகரசபை அறிவித்துள்ளது. இவ்வாறன தற்காலிக கொட்டகைகள் நடந்து செல்லும் பாதசாரிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. அண்மையில் புதிய மாநகரசபை பொறுப்பேற்று புதிய உறுப்பினர்கள் நகரப்பகுதிகளில் இந்த நடவடிக்கைகளை பார்வையிட்டனர். அதனை தொடர்ந்து இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

தற்காலிக கொட்டகைகளை அகற்ற தவறும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படுமென குறித்த பொது அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகர முதல்வரின் அறிவிக்கப்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலில் இதனை அகற்றுவதற்கான கால எல்லை குறிப்பிடப்படவில்லை.

வவுனியா கடைகளில் மேலதிக கொட்டகைகளை அகற்ற அறிவித்தல்

Social Share

Leave a Reply