வவுனியாவில் கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுமிடங்கள் – இன்றைய (09.09) & நாளைய (10.09) விபரம்

வவுனியாவில் இன்று மூன்றாம் நாளாக தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன. சிதம்பரம் வைத்தியசாலையில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன. மற்றைய சகல நிலையங்களிலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன. வவுனியா நகரம், வவுனியா  நகரம் வடக்கு, இறம்பைக்குளம், வைரவர்புளியங்குளம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான   தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் ஆரம்பிக்கவுள்ளன. நீண்டநாள் நோயாளர்களுக்கு வவுனியா வைத்திய சாலையில் ஊசிகள் ஏற்றப்படவுள்ளன. தாண்டிக்குளம், மூன்று முறிப்பு, கந்தபுரம் ஆகிய இடங்களுக்கும் இன்றைய தினம் தடுப்பூசிகள் வழங்கபபடவுள்ளன.

ஆசிகுளம், சமலங்குளம், வன்னிக்கோட்டம், சிதம்பரபுரம், சிதம்பரநகர்,கோமரசன்குளம், கல்நாட்டினகுளம், கல்வீரன்குளம், தரணிக்குளம், மதுராநகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் கிராமசேவையாளரிடம் விண்ணப்பபடிவத்தையும் , வரிசை இலக்கத்தையும் (டோக்கன்) பெற்றுக்கொண்டு சிதம்பரபுரம் வைத்தியசாலையில் தங்களுக்கான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும். 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் ஊசிகளை பெற்றுக்கொள்ள முடியும்.

ஏற்கனவே அறிவித்தன்படி வவுனியா நகரம், வவுனியா  நகரம் வடக்கு, இறம்பைக்குளம், வைரவர்புளியங்குளம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான   தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் இன்று   09 ஆம் திகதி வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது. முதலாவது இரண்டாவது ஊசிகளை பெறவுள்ளவர்கள் தங்களுக்கான கிராமசேவையாளரிடம் விண்ணப்பபடிவத்தினை பூர்த்தி செய்து, வரிசை இலக்கத்தையும்(டோக்கன்) பெற்று காலை 8 மணிமுதல் பிற்பகல் 2 மணிக்குள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியுமென வவுனியா மாவட்ட தொற்றுயியலாளர் வைத்திய கலாநிதி செ.லவன் வி தமிழுக்கு தெரிவித்துள்ளார்.

அரச திணைக்களங்களை சேர்ந்தவர்கள் 10 ஆம் திகதி முதல் வுனியா காமினி மகா வித்தியாலயத்தில் தடுபூசிகளை பெற்றுக்கொள்ள முடியும். வவுனியா பிராந்திய சுகாதர திணைக்களத்தின் தொற்றுயில் பிரிவில் விண்ணப்பபடிவங்களை பெற்று கிராமசேவையாளரிடம் பூர்த்தி செய்து தங்களுக்கான தடுப்பூசிகளை வுனியா காமினி மகா வித்தியாலயத்தில் பெற்றுக்கொள்ளலாம். பிறமாவட்டங்களை சேர்ந்தவர்கள் திணைக்கள தலைவரின் கையொப்பத்தோடு ஊசிகளை பெற்றுகொள்ள முடியும். கிராமசேவகர் பிரிவுக்கான நிலையங்களிலும் ஊசிகளை பெற்றுகொள்ள முடியும்.

நீண்ட நாள் நோயுடையவர்களும், தொற்றா நோயுடையவர்களும் அவர்களுக்கான விசேட வைத்திய நிபுணரின் ஆலோசனையோடு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள முடியும். அவர்களுக்கான விண்ணப்ப படிவங்களை வைத்தியசாலையிலேயே பெற்று பூர்த்தி செய்து ஊசிகளை போட்டுக்கொள்ள முடியும்.

ஆசிரியர்கள் தங்களுக்கான விண்ணப்ப படிவங்களை  பூர்த்தி செய்து கிராம சேவையாளரிடம் உறுதி செய்தி வரிசை இலக்கத்தையும்(டோக்கன்)  பெற்றுக் கொண்டு  தங்கள் கிராமசேவையாளர் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையத்தில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும். கட்டாயம் பாடசாலைக்கு ஒதுக்கப்பட்ட நிலையத்தில்தான் ஊசிகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றில்லை எனவும் சுகாதர தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

ஊசிபோடுதல் தொடர்பில் அறிவித்தல்கள் தொடர்ச்சியாக கிராம சேவையாளரூடாக வழங்கப்படுமெனவும், அறிவிக்கப்படாத பகுதிகள் மற்றும் வயது பிரிவுகள் தொடர்பிலும் கிராமசேவையாளர்கள் ஊடக அறிவித்தல்கள் வழங்கப்பபடுமெனவும் அவற்றினடிப்படையில் செயற்படுமாறும் வவுனியா மாவட்ட தொற்றியலாளர் வைத்தியகலாநிதி செ.லவன் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

வி தமிழ் இணையத்தில் தொடர்ச்சியாக வவுனியாவில் தடுப்பூசிகள் ஏற்றப்படும் விபரங்களை தந்து வருகிறோம். தொடர்ச்சியாக எமது இணையத்தை பார்வையிடுவதன் மூலம் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.

இன்றும் நாளையும் தடுப்பூசிகள் வழங்கப்படும் நிலையங்களும், கிராம சேவகர் பிரிவு விபரங்களும் கீழுள்ள அட்டவணையில் காணப்படுகின்றன.

இன்று (09.09.2021)  தடுப்பூசி வழங்கும் நிலையங்கள்

தடுப்பூசி வழங்கும் நிலையம்கிராம சேவகர் பிரிவு
வவுனியா காமினி மகா வித்தியாலயம்வவுனியா நகரம், வவுனியா நகரம் வடக்கு, வைரவர் புளியங்குளம், இறம்பைக்குளம்
வவுனியா மாவட்ட வைத்தியசாலைநீண்டநாள் நோயுடையவர்கள்
தாண்டிக்குளம் பிரமண்டு மகா வித்தியாலயம்தாண்டிக்குளம்
கந்தபுரம் வாணி வித்தியாலயம்கந்தபுரம்
தமிழ் மத்திய மகா வித்திரியாலயம்                                           மூன்றுமுறிப்பு  
விபுலானந்தா மகாவித்தியாலயம்பண்டாரிகுளம்
பூவரசங்குளம் வைத்திய சாலைபூவரசங்குளம் பம்பைமடு செக்கடிப்பிலவு வேலங்குளம் சாலம்பைக்குளம் பாவற்குளம் படிவம் 04 பாவற்குளம் படிவம் 05 & 06 குருக்கள் புதுக்குளம்
பாவற்குளம் வைத்தியசாலை ராசேந்திரங்குளம் சூடுவெந்தபிலவு பாவற்குளம் படிவம் 02
சிதம்பரபுரம் வைத்தியசாலைஆசிகுளம், சமலங்குளம், வன்னிக்கோட்டம், சிதம்பரபுரம், சிதம்பரநகர்,கோமரசன்குளம், கல்நாட்டினகுளம், கல்வீரன்குளம், தரணிக்குளம், மதுராநகர்
ஓமந்தை வைத்தியசாலைநொச்சிகுளம் கள்ளிகுளம் சேமமடு பன்றிகெய்தகுளம் ஆறுமுகத்தான்புதுக்குளம் ஓமந்தை மகிழங்குளம் இளமருதங்குளம் 
நவ்வி வைத்தியசாலைமருதமடு புல்மோட்டை
செட்டிகுளம் வைத்தியசாலை செட்டிகுளம் முகத்தான் குளம் கிறிஸ்தவகுளம் கன்கன்குளம் பாவற்குளம் படிவம் 09 முதலியார் குளம் ஆண்டியா புளியங்குளம் கந்தசாமிநகர் 
கணேசபுரம் வைத்தியசாலைபெரியதம்பனை பெரியகட்டு கன்னட்டி பிரமநாலன்குளம்
நேரியகுளம் வைத்தியசாலை  நேரியகுளம் சின்னசிப்பிக்குளம் மரதமடுவ  பெரியபுளியங்குளம்
மாமடு வைத்தியசாலை  மாமடு அக்போபுர மஹாகச்சகொடிய புதுபுளங்குலமா
புளியங்குளம் வைத்தியசாலை  புளியங்குளம் வடக்கு புளியங்குளம் தெற்கு
நெடுங்கேணி வைத்தியசாலை  நெடுங்கேணி வடக்கு நெடுங்கேணி தெற்கு
கனகராயன்குளம் வைத்தியசாலை  கனகராயன்குளம் வடக்கு கனகராயன்குளம் தெற்கு மாங்குளம் சின்னடமபன் 
நைனாமடு வைத்தியசாலை  நைனாமடு அனந்தர்புளியங்குளம் பரந்தன்
குழவிசுட்டான் நிலையம்   குழவிசுட்டான் மரையிலுப்பை
ஒலுமடு அ.த.க பாடசாலை  ஒலுமடு மாமடு
கற்குளம் நிலையம்  கற்குளம் மருதோடை பட்டிக்குடியிருப்பு ஊஞ்சல்கட்டி வெடிவைத்தகல்லு 
போகஸ்வெவ வைத்தியசாலைபிரப்பன்மடுவ
பரக்கும் மஹா வித்தியாலயம்  இரட்டைபெரியகுளம் அவுஷதப்பிட்டிய அலகல்ல கல்குடாமடு
உலுக்குளம் வைத்தியசாலை  உலுக்குளம் ஏக்கர் 20,40,60 ஏக்கர் 400
மடுக்கந்த விகாரை  மடுக்கந்த மஹாமகிழங்குலம நெடுங்குளம
நடமாடும் சேவை  அவரத்துலவா ரெங்கெத்கெம பூமடுவ ரக் 07 மரதன்மடுவ

நாளை (10.09.2021) தடுப்பூசி வழங்கும் நிலையங்கள்

தடுப்பூசி வழங்கும் நிலையம்கிராம சேவகர் பிரிவு
வவுனியா காமினி மகா வித்தியாலயம்அரச திணைக்களங்கள்
வவுனியா மாவட்ட வைத்தியசாலைநீண்டநாள் நோயுடையவர்கள்
சைவப்பிரகாச மகளிர் கல்லூரிகல்விசார் ஊழியர்கள்
கோவில்குளம் இந்துக்கல்லூரி       கோவில்குளம்
ஸ்ரீராமபுரம்           திருஞானசம்பந்தர் மகா வித்தியாலயம்காத்தார் சின்னகுளம்             
மகாறம்பைக்குளம் மகாவித்தியாலயம்மகாறம்பைக்குளம்
பூவரசங்குளம் வைத்திய சாலைபூவரசங்குளம் பம்பைமடு செக்கடிப்பிலவு வேலங்குளம் சாலம்பைக்குளம் பாவற்குளம் படிவம் 04 பாவற்குளம் படிவம் 05 & 06 குருக்கள் புதுக்குளம்
பாவற்குளம் வைத்தியசாலை ராசேந்திரங்குளம் சூடுவெந்தபிலவு பாவற்குளம் படிவம் 02
சிதம்பரபுரம் வைத்தியசாலைஆசிகுளம், சமலங்குளம், வன்னிக்கோட்டம், சிதம்பரபுரம், சிதம்பரநகர்,கோமரசன்குளம், கல்நாட்டினகுளம், கல்வீரன்குளம், தரணிக்குளம், மதுராநகர்
ஓமந்தை வைத்தியசாலைநொச்சிகுளம் கள்ளிகுளம் சேமமடு பன்றிகெய்தகுளம் ஆறுமுகத்தான்புதுக்குளம் ஓமந்தை மகிழங்குளம் இளமருதங்குளம் 
நவ்வி வைத்தியசாலைமருதமடு புல்மோட்டை
செட்டிகுளம் வைத்தியசாலை செட்டிகுளம் முகத்தான் குளம் கிறிஸ்தவகுளம் கன்கன்குளம் பாவற்குளம் படிவம் 09 முதலியார் குளம் ஆண்டியா புளியங்குளம் கந்தசாமிநகர் 
கணேசபுரம் வைத்தியசாலைபெரியதம்பனை பெரியகட்டு கன்னட்டி பிரமநாலன்குளம்
நேரியகுளம் வைத்தியசாலை  நேரியகுளம் சின்னசிப்பிக்குளம் மரதமடுவ  பெரியபுளியங்குளம்
மாமடு வைத்தியசாலை  மாமடு அக்போபுர மஹாகச்சகொடிய புதுபுளங்குலமா
புளியங்குளம் வைத்தியசாலை  புளியங்குளம் வடக்கு புளியங்குளம் தெற்கு
நெடுங்கேணி வைத்தியசாலை  நெடுங்கேணி வடக்கு நெடுங்கேணி தெற்கு
கனகராயன்குளம் வைத்தியசாலை  கனகராயன்குளம் வடக்கு கனகராயன்குளம் தெற்கு மாங்குளம் சின்னடமபன் 
நைனாமடு வைத்தியசாலை  நைனாமடு அனந்தர்புளியங்குளம் பரந்தன்
குழவிசுட்டான் நிலையம்   குழவிசுட்டான் மரையிலுப்பை
ஒலுமடு அ.த.க பாடசாலை  ஒலுமடு மாமடு
கற்குளம் நிலையம்  கற்குளம் மருதோடை பட்டிக்குடியிருப்பு ஊஞ்சல்கட்டி வெடிவைத்தகல்லு 
போகஸ்வெவ வைத்தியசாலைபிரப்பன்மடுவ
பரக்கும் மஹா வித்தியாலயம்  இரட்டைபெரியகுளம் அவுஷதப்பிட்டிய அலகல்ல கல்குடாமடு
உலுக்குளம் வைத்தியசாலை  உலுக்குளம் ஏக்கர் 20,40,60 ஏக்கர் 400
மடுக்கந்த விகாரை  மடுக்கந்த மஹாமகிழங்குலம நெடுங்குளம
நடமாடும் சேவை  அவரத்துலவா ரெங்கெத்கெம பூமடுவ ரக் 07 மரதன்மடுவ
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version